கடந்த சில வருடங்களாக சித்தார்த் மற்றும் அதிதி குறித்து காதல் கிசு கிசு பரவி வந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்துள்ளார் அதிதி. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமூக வளைத்தளத்திலும் ட்ரெண்டிங்கான நபர் தான். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி இருக்கிறார். இது குறித்து இவர் மீது பல விமர்சனங்கள் வந்து இருக்கிறது.
அதிதி ராவ் ஹைதாரி திரைப்பயணம்:
இந்த நிலையில் மணிரத்னம் பட நடிகையை சித்தார்த் காதலித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவந்தது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
https://www.youtube.com/watch?v=SOotqhQgVr0
அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் படங்கள்:
முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் இவர் செக்க சிவந்த வானம்,சைக்கோ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடன மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் வெளியாகி இருந்த ஹே சினாமிகா படத்தில் அதிதி ராவ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
சித்தார்த் - அதிதி ராவ் காதல்:
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாக மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள். அதோடு அடிக்கடி இருவரும் டேட்டிங் சென்று வருவதையும் வாடிக்கையாக வைத்து வந்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவந்தது.
View this post on Instagram
நிச்சயதார்தம் :
ஆனால், இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவோ, காதலிப்பதாகவோ குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் ரகசிய திருமணமே முடித்துவிட்டதாக கிசுகிசு வெளியானது. இப்படி ஒரு நிலையில் தங்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதிதி. இதில் இருவருமே கையில் மோதிரம் அணிந்தும் இருக்கின்றனர்.





