சினிமா ஆசைக்கு ஷங்கர் போட்ட கண்டிஷனை நிறைவேற்றிய மகள் – அடுத்த படம் யாருடன் தெரியுமா ?

0
720
aditi
- Advertisement -

சமீப காலமாக பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல சினிமா வாரிசு நடிகர்கள் களமிறங்கி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வாரிசு நடிகையாக களமிறங்கி இருபவர் தமிழ் சினிமாவின் பிரம்மான்ட இயக்குனராக போற்றப்படும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர்.

-விளம்பரம்-

சங்கர் மகள் அதிதி :

இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மற்றொரு மகளான அதிதி, முத்தய்யா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

- Advertisement -

ஷங்கர் போட்ட கண்டிஷன் :

இந்த படத்தில் நாயகி தேர்வின் போது ஷங்கர் மகள் அதிதியின் பெயர் அடிபட்டுள்ளது. அதிதி தற்போது தான் டாக்டர் படிப்பை முடித்து உள்ளார். இருந்தாலும் அவர் நடிக்க தயாராக இருந்துள்ளார். ஆனால், ஷங்கர், தனது மகளுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அது என்னவெனில் அதிதி ஷங்கருக்கு ஒரு வருடம் டைம் கொடுத்துள்ள ஷங்கர் அதற்குள் உனக்காக வாய்ப்பை தேடிக்கொள் என்று தன் மகளிடம் கூறி இருக்கிறாராம்.

அடுத்த படத்தின் வாய்ப்பு :

ஆனால், ஒருவருடத்திற்கு உள்ளாகவே அதிதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் முதல் படத்திலேயே கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது டபுள் போனஸ் தான். இப்படி ஒரு நிலையில் ஒரே வருடத்தில் இரண்டாம் படத்தின் வாய்ப்பை பெற்று இருக்கிறார் அதிதி. அதுவும் சிம்பு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் அதிதி.

-விளம்பரம்-

சிம்பு – அதிதி :

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சூப்பர் ஹிட் படத்திற்காக போராடிக்கொண்டு இருந்த சிம்புவிற்கு இந்த பாடம் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இதையடுத்து சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Corona Kumar Official First look Teaser | Simbu | Countdown Starts | Gokul  | STR48 First look - YouTube

கொரோனா குமார் :

இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் (Corona Kumar) என்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்தையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படி ஒரு நிலையில் கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement