நடிகர் விஜய்யை வருமானவரித்துறையில் மாட்டிவிட திமுக செய்து இருக்கும் சதி வேலை குறித்து அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனால் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றி கழகம் என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜய் அரசியல்:
மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வரும் 22-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

அதிமுக எம்.எல்.ஏ. சொன்னது:
இந்த நிலையில் விஜயை IT ரெய்டில் மாட்டி விட இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அதிமுகவின் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நிறையூரில் உள்ள கைத்தறி நகரில் நடைபெற்றிருக்கிறது. அதில் பங்கேற்ற எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, திமுக கட்சி பாஜகவுடன் உறவு வைத்து இருக்கிறது. இந்தியா கூட்டணியை உருவாக்கியது நான் தான் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
விஜய்யை IT ரெய்டில் மாட்டி விட திட்டம் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா#Vijay | #AIADMK | #DMK | #ITraid | #tvkvijay pic.twitter.com/z8seHDqFF6
— Thanthi TV (@ThanthiTV) August 20, 2024
விஜய் கட்சி குறித்து சொன்னது:
எதற்கு பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சித்து இருக்கிறார்? விஜயை IT ரெய்டில் மாட்டி விடவும், இருவரும் லாபம் காணத்தான் இரண்டு கட்சிகள் கூட்டணி வைக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து திமுகவிற்கு பயம் கண்டுவிட்டது. அவரை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்று தான் பல்வேறு திட்டங்களை செய்கிறார்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் கட்சி கொடி:
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியினை அறிமுகம் செய்தவுடன் அனைத்து பகுதிகளிலுமே கொடியேற்றும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தலைமையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டிருக்கிறார். அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் காட்சியளிக்கிறது. இது ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது.






