உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஆடுகளம் பட நடிகர் ஜெயபாலன்-அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

0
116
Joshua
- Advertisement -

ஆடுகளம் பட நடிகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருக்கும் நிலையில் இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதிலும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய படங்களில் ஒன்று தான் ஆடுகளம்.
இந்த படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் டாப்ஸி தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் கோழி சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று இருந்தது.

- Advertisement -

ஆடுகளம் படம்:

அதோடு அந்த ஆண்டு வழங்கப்பட தேசிய விருதுகளில் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த நடிகர் போன்ற ஆறு பிரிவுகளின் கீழ் ஆடுகளம் படம் வாங்கி இருந்தது. மேலும், இந்த படத்தில் பேட்டைக்காரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் வி ஐ எஸ் ஜெயபாலன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மிகச்சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவர் இலங்கையில் பிறந்தவர்.

ஜெயபாலன் குறித்த தகவல்:

இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே கதை கட்டுரைகளை எழுத துவங்கினார். பின் ஆடுகளம் படத்தின் மூலம் தான் நடிகராக சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜெயபாலன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

ஜெயபாலன் உடல்நிலை:

அதாவது, சமீப காலமாகவே நடிகர் ஜெயபாலன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் இவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் உடல்நிலை சரியில்லாமல் போனதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதோடு இவரின் மொத்த குடும்பமும் தற்போது பிரான்ஸ் நாட்டில் தான் இருக்கிறது.

ரசிகர்கள் வேண்டுகோள்:

அவர்களால் இவரை சந்திக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் நடிகர் ஆடுகளம் பட நடிகர் ஜெயபாலனின் புகைப்படம் தான் வெளியாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே அவர் உடல்நலம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement