35 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் மரியாதை பட நடிகர்.

0
59326
muthalmariyathai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுப்பூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தைப் பெற்று உள்ளார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்க படங்களுள் ஒன்று தான் முதல் மரியாதை. இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ், வடிவுகரசி, தீபன், ரஞ்சினி, ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாக கொண்ட கதை. இளையராஜாவின் இசையும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது. இந்த படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் தீபன் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தீபன் அவர்கள் 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தீபன் அவர்கள் முதல் மரியாதை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்னும் சொல்லுமளவிற்கு போனால் இவர் மறைந்த முதல் அமைச்சர் எம்ஜிஆரின் உறவினர் ஆவார். இவர் முழுக்க முழுக்க எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மட்டுமில்லாமல் அதிமுக தொண்டரும் ஆவார். ஜெயலலிதா அம்மாவின் வழிகாட்டுதல் படி வந்தவர் ஓ பன்னீர்செல்வம். தற்போது அவர் முதல்வராக இருக்கிறார்.

அவர் தலைமையில் அவர் சரியாக கட்சியை நடத்துவார் என்றும், அவர் திறமையானவர், அவருக்கு எல்லோரும் துணை நிற்க வேண்டும் என்றும் நடிகர் தீபன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசி இருந்தார். இந்நிலையில் நடிகர் தீபன் அவர்கள் தற்போது 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடிக்கும் படத்தின் பெயர் கேர் ஆஃப் காதல். இப்படத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement