சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ள சிவா அதுவும் சூர்யாவிற்கு இப்படி ஒரு ரோலா ? (சிங்கத்திற்கு சிறுத்தை பார்முலாவா)

0
533
Surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா வீரம்,வேதாளம்,விவேகம் விஸ்வாசம் என்று அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கிவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் தலையில் கை வைத்தனர்.

- Advertisement -

ஆனால், அது உண்மை இல்லை என்று தெரிந்ததும் தான் அஜித் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகினர். இப்படி ஒரு நிலையில் தான் இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி இருந்த்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

surya

இந்த நிலையில் இயக்குநர் சிவா நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா இரு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பணிகளை இயக்குநர் சிவா  தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை படத்திற்கு பின்னர் இரட்டை கதாபாத்திரத்தை வைத்து சிவா எடுக்கும் இரண்டாம் படமாக இந்த படம் அமைய இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement