பிரசன்னவிற்கவாது ரூ.13,528 தான்- இந்த தமிழ் நடிகைக்கும் 1 லட்சம் வந்திருக்காம் கரண்ட் பில்லு.

0
6369
prasanna
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பிரசன்னா Vs தமிழ் நாடு மின்வாரியதிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் ஒரு புறம் சற்று வைரலாக பேசப்பட்டுவந்தது . கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். இந்நிலையில் கோடைகாலம் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் லாக்டவுனில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பிரசன்னாவின் குற்றசாட்டிற்கு மின்சார துறை பதில் அளித்ததோடு பிரசன்னாவிற்கு கண்டமும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் பிரசன்னா, மார்ச் மாதத்தர்கான ரூ. 13,528 மின்கட்டணத்தை நடிகர் பிரசன்னா செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்கள். பின்னர் அந்த கட்டணத்தை கட்டினார் பிரசன்னா.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல நடிகை ராதாவின் மூத்த மகளும் நடிகையுமான கார்த்திகா தனக்கு வந்திருக்கும் அதிக மின் கட்டணம் குறித்து முதல்வரிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என்ன விதமான ஊழலை அதானி மின்வாரியம் மும்பையில் நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த லாக்டவுனில் கொண்டிருக்கிறத என்னுடைய ஜூன் மாத மின்கட்டணம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் (லாக் டவுனில் மின் ஊழியர்கள் ரீடிங் எடுக்க முடியாததால் அவர்கள் குத்துமதிப்பாக போட்டிருக்கிறார்கள் ) இதே போன்ற புகார்கள் பல மும்பை வாசிகளிடமும் வருகிறது என்று பதிவிட்டுள்ள கார்த்திகா மகாராஷ்டிரா முதலமைச்சரையும் குறிப்பிட்டுள்ளார்

நடிகை கார்த்திகாவின் இந்த பதிவை கண்ட பல்வேறு ட்விட்டர் வாசிகள் தங்களுக்கும் இதே போன்று அதிக மின் கட்டணம் வருகிறது என்று புலம்பி தள்ளி வருகின்றனர். இந்த புகார்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள மும்பை அதானி மின் வாரியம், இதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் இதுகுறித்து புகார் அளியுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று பதில் அளித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement