கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அதனை முதல்வர் நிவாரண நிதியாக செலுத்த முடியாது என்று விஜய் தரப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின் போது கூறி இருந்தது. தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டும் தான் இந்த கார் இருக்கிறது. அதே போல இந்தியாவில் சஞ்சய் தத், அமிதாப் பச்சன் போன்ற ஒரு சிலர் பிரபலங்களிடம் மட்டுமே இந்த ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் பல்வேரு படங்களில் வந்து இருக்கும். அந்த வகையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தின் கிளைமாக்ஸ்சில் கொக்கி குமராக தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்குவர். அந்த கார் வேறு யாருடையதும் இல்லை தனுஷுடையது தான். நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு இந்த காரை வாங்கினார். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் தான் இந்த காரை தனுஷ் பயன்படுத்துவர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்னால வாழ்கையே போச்சி – இத்தனை வருசமாக நான் பேட்டி கொடுக்காத காரணம் இதான்,

Advertisement

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நீதி மன்றத்தில் வந்த போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய், நுழைவு வரி விலக்கு கேட்டு வழங்கு தொடர்ந்த நிலையில் தற்போதும் தனுஷும் விஜய்யை போல புதிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

Advertisement
Advertisement