பிக் பாஸ்னால வாழ்கையே போச்சி – இத்தனை வருசமாக நான் பேட்டி கொடுக்காத காரணம் இதான்,

0
63091
sakthi

தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை நடிகர், இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.பி வாசு தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்த போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை.

ஷக்தி அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதன் பின் பல படங்கள் நடித்து உள்ளார். ஆனால், சக்திக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவருக்கு வாய்ப்பு வரவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சக்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் என் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று புலம்பியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், அறியாமையால் நான் பல்வேறு தவறுகளை செய்துவிட்டேன் இதற்கு யார் மீதும் நான் படி போட விரும்பவில்லை சூட்டிங்கில் கூட நான் எந்த கேள்வியும் கேட்பது இல்லை அதற்கு காரணம் நான் தந்தையின் செல்வாக்கில் திமிராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியால் நான் நிறைய இழந்து விட்டேன். அந்த நிகழ்ச்சியால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மிகப்பெரிய மன அழுத்தத்தில் தான் உள்ளே சென்றேன்.

இதையும் பாருங்க : திருமணமான இரண்டே வருடத்தில் இறந்த முதல் மனைவி – இன்றும் அவர் நினைவாக பாக்கியராஜிடம் உள்ள அவர் கொடுத்த முதல் பரிசு.

அந்த நிகழ்ச்சியில் பல்வேறு செலிபிரிட்டி கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உள்ளே போன பின்பு தான் தெரிந்தது அந்த வீட்டில் நான் ஒருத்தன்தான் ஹீரோ ஓவியா ஒருத்தர் மட்டும் தான் ஹீரோயின். ஆனால், அவரை நல்லவராக காட்டி விட்டு என்னை கெட்டவராக காட்டிவிட்டார்கள் அதைப் பற்றி தற்போது நான் கவலைப்படவில்லை. அதைப்பற்றி தற்போது நான் கவலைப்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எனக்கு பாதி பெண் ரசிகைகள் போய்விட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்னர் பெண் ரசிகைகள் என்னை சக்தி சார் என்று அழைப்பார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னிடம் பெண் ரசிகைகள் ஓவியா போல நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

பலரும் என்னிடம் ஓவியா போல பார்ப்பது ஓவியா போல செய்வது என்றுதான் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக நான் மிகவும் குண்டாக மாறி விட்டேன். அதனால் தான் பேட்டிகளை கூட கொடுப்பது இல்லை. தற்போது மீண்டும் என்னை தயார் செய்து வருகிறேன். விரைவில் ஒரு நல்ல படம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேபோல தனக்கு விஜய்சேதுபதி தான் மிகவும் பிடிக்கும் என்றும் அவரைப் போல பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார் சக்தி.

Advertisement