சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகள் புக் செய்து வருகிறது. தலைவா படம் துவங்கி சமீபத்தில் வெளியான பிகில் படம் வரை பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது விஜய்யை படப்பிடிப்பிற்கே சென்ற வருமான வரித்துறையினர் விஜயை அழைத்து வந்தனர்.

Advertisement

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா். சோதனைக்கு பின்னர் விஜய் நேரிலும் ஆஜராகி விளக்கமளித்தார்

இந்த நிலையில் இன்று (மார்ச் 12 ) விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருவகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் தற்போது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது மாஸ்டர் படம் நெருங்கும் வெளியில் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

Advertisement

ஏற்கனவே விஜய்யின் ஐடி ரெய்டு விவகாரம் சட்ட சபை வரை எதிரொலித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் போது தி மு க எம் பி தயாநிதி மாறன்,விஜய்யிடம் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விவாதித்தார். அப்போது பேசிய அவர், தமிழக்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வரிச்சலுகையாக 1 கோடி அளித்துள்ளார்கள் வரவேற்கத்தக்க விஷயம் தான். அனால், , நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சோதனை நடத்தினர். மேலும், “மாஸ்டர்” திரைப்படத்துக்காக, என்எல்சி நிறுவன வளாகத்தில் படப்பிடிப்பில் இருந்த விஜயை, சென்னைக்கு வலிய அழைத்து வந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதனால் படகுழுவிற்கு எவ்வளவு நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து ரஜினிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து ரஜினி மேல்முறை செய்ய அந்த நோட்டீசை அமலாக்கத்துறை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement