மூடர் கூடம், அலாவுதீனும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நவீன் தான் “அக்னி சிறகுகள்” படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா ஆவார். நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினியாக அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டே தான் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். மேலும், அவர் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. பின்னர் அவரை நீக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை நடிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சிவா அவர்கள் நடிகை ஷாலினி பாண்டே மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். ஏன்? எதற்கு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதை பற்றி அவரே விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியது, ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பார்த்து விட்டு தான் நடிகை ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்தோம். இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்த பின் 100 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று அவரிடம் முதலிலேயே நாங்க பேசினோம். வெளிநாடுகளில் கூட ஷூட்டிங் இருக்கும் என்று சொல்லிவிட்டு அதற்கு பிறகு தான் அக்ரிமென்டில் ஒப்பந்தம் வாங்கினோம். அப்போது அவர் 10 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வந்தார். மேலும், 100 நாட்கள் சூட்டிங் என்பதால் நாங்கள் அவருக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் பேசினோம். பின் அவருக்கு 15 லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது.

இதையும் பாருங்க : விருது விழாவிற்கு கிளாமரான உடையில் சென்ற அருவி பட நடிகை அதிதி பாலன்.

Advertisement

அவரும் நன்முறையில் தான் 27 நாட்கள் சூட்டிங்க்கு வந்து நடித்து கொடுத்தார். பிறகு அக்டோபர், நவம்பரில் அருண் விஜய் – விஜய் ஆண்டனி இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் வேண்டும் என்பதாலேயே 6 மாதம் காத்திருந்தோம். இருவருமே பிஸியாக இருந்தார்கள். ஆகையால், இருவருடைய தேதிகள் ஒன்றுபோல் 45 நாட்கள் வாங்கிவிட்டு, ஷாலினி பாண்டேவிடம் சொல்லி தேதிகளையும் வாங்கி வைத்திருந்தோம். அந்தச் சமயத்தில் தான் எனக்கு இந்தியில் உருவாகும் ஜயேஷ்பாய் ஜோர்டார் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து உள்ளது. ஆகையால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று கூறினார் நடிகை ஷாலினி.

Advertisement

அதற்கு நாங்கள் பண்ணமுடியாதும்மா, ஏனென்றால் கஜகஸ்தானில் படப்பிடிப்பு நடக்க போகிறது என்று சொன்னோம் . உடனே ரன்பீர் கபூர் படம் கிடைத்த பிறகு, எதுவானாலும் செய்துவிடுவேன். யாஷ்ராஜ் நிறுவனத்தில் படம் பண்ணுகிறேன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வரமாட்டேன்’. காத்திருந்தால் 6 மாதம் கழித்து வருகிறேன். இந்திப் படத்துக்கு 6 மாதம் ஒப்பந்தம் போட்டுவிட்டேன் என்று ஷாலினி பாண்டே சொன்னார். மேலும், ஷாலினி பாண்டேவால் படப்பிடிப்பில் எந்தவொரு பிரச்சினையுமில்லை. ரன்பீர் கபூர் படம் கிடைத்தவுடன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனச் சென்றுவிட்டார்.

Advertisement

இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை என அனைத்து நடிகர் சங்கங்களிலும் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் மோசடி( கிரிமினல்) வழக்கு ஒன்று தொடர்ந்து உள்ளோம். ஷாலினி பாண்டேவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் அவரை அசிங்கப்படுத்துவது கிடையாது. அவரை வைத்து ஷுட் பண்ணிய பணம் எனக்குத் திரும்ப தர வேண்டும். அதோடு 27 நாள் ஷுட்டிங்கிற்கான பணம் எவ்வளவோ, அதைக் கொடுத்தால் இந்த பிரச்னையை முடித்துக் கொள்ளவோம் என்று தயாரிப்பாளர் சிவா கூறினார். இப்படி இந்தி படத்திற்காக தமிழ் படத்தை கை கழுவிய ஷாலினி பாண்டேய மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சிவா.

Advertisement