தமிழில் வெளியான அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அதிதி பாலன். சமீபத்தில் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சியான ஆடையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும்,மக்களிடமும் நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் இயக்கி இருந்தார்கள். மேலும்,இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்திருக்கிறார். மேலும் ,அருவி படத்தைப் பார்க்கும் போது நம்பக்கத்து வீட்டு பெண் போல உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ‘சமூக –அரசியல்’ உள்ள திரைப்படமாக இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்திருந்தார் இயக்குனர். இந்த படம் நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்புகளில் இருந்து வெளிப்படையை விளக்குகின்ற கதையாகும்.
மேலும், வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை அதனால் அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார் என்பதே அருவியின் கதை. அதிதி பாலன் அவர்கள் “அருவி” படத்திற்கு முன்பே அஜித் அவர்களின் ‘எண்ணை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் நண்பராக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாது.ஆனால்,அருவி படத்தின் மூலம் தான் பல பேர் கவனித்தார்கள்.
அருவி படத்திற்கு பின்னர் அதிதி பாலன் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது மலையாளத்தில் ஒரே படத்தில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் திரை துறையில் சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த படம் உள்ளிட்டவைகளுக்கு விருது வழங்கும் பிலிம் பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிதி பாலன் கவர்ச்சியான ஆடை அணிந்து கிளாமராக வந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.