தமிழக முதல்வருடன் தல அஜித்தா! இதுவரை யாரும் பார்த்திடாத அன்ஸின் புகைப்படம்- ட்ரெண்டிங்காக்கும் ரசிகர்கள்

By subhashini · 6/3/2022

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் இறுதியில் ரிலீசானது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கினார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் அஜித் உடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வலிமை படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

இந்த நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ஏகே 61 படத்தில் அஜித் லுக்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 61 வது படம் பற்றி வினோத் சொன்னது:

சமீபத்தில் அஜித்தின் ஏகே 61 படம் குறித்து இயக்குனர் வினோத் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், இந்த படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே அஜித் தான் என்று கூறியிருக்கிறார். உடனே அஜித்திற்கு இரட்டை வேடமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு வினோத் இப்போதைக்கு சொல்லமுடியாது என்று பதிலளித்துள்ளார். மேலும், வலிமை படத்தின் டைட்டிலை அந்த படத்தின் பூஜை அன்றே படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். அந்த வகையில் அஜித்தின் 61 வது படத்தின் பூஜை அன்று படத்தின் டைட்டிலை அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித்- மு க ஸ்டாலின் இருக்கும் புகைப்படம்:

இந்த படத்தின் டைட்டிலை வல்லமை என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் பற்றிய அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் ஒரு அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் உடன் அஜித்-ஷாலினி, பிரசாந்த் மூவரும் இருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் காட்டுத்தீயை விட வேகமாக வைரலாகி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் குறித்து பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்கில் இந்த புகைப்படம் தான் உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full