இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட 24 வயது பிரபல நடிகை மாரடைப்பால் இறந்த சோகம்.

0
391
Aindrila
- Advertisement -

புற்றுநோயிலிருந்து மீண்டு மாரடைப்பில் வங்காள நடிகை ஐந்த்ரிலா ஷர்மா இறந்திருக்கும் தகவல் தற்போது திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபகாலமாகவே திரையுலக நட்சத்திரங்கள் பலர் மாரடைப்பால் இறப்பது அதிகமாகி கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் மகேஷ்பாபுவின் அப்பாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார்.

-விளம்பரம்-

இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் வங்காள நடிகை ஐந்த்ரிலா ஷர்மா மாரடைப்பில் இறந்து உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐந்த்ரிலா ஷர்மா. இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூரை சேர்ந்தவர். இவர் ஜுமுர் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தான் மீடியாவுக்கு அறிமுகமானார்.

- Advertisement -

ஐந்த்ரிலா ஷர்மா திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற பல சின்ன திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார். அதன் பின் இவர் அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற சில படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வங்காள மொழியில் வெளியான பாகர் என்ற வெப் தொடரில் ஐந்த்ரிலா ஷர்மா நடித்திருந்தார்.

ஐந்த்ரிலா ஷர்மா உடல்நிலை:

இந்நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ஐந்த்ரிலா ஷர்மா அவர்கள் ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு இருந்தார். பின் இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு:

இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் மண்டை ஓட்டில் இருந்து இவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது. பின் அறுவை சிகிச்சையும் செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள். அதன் பின் வென்டிலேட்டர் உதவியுடன் ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு நேற்று இரவு சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையின் போதே இவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல் நிலையும் மிக மோசமாக இருந்தது.

ஐந்த்ரிலா ஷர்மா மரணம்:

பின் அவருக்கு சிஆர்பி கொடுக்கப்பட்டு காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்கள். ஆனாலும், பலன் இல்லாமல் ஐந்த்ரிலா ஷர்மா உயிரிழந்திருக்கிறார். தற்போது இவருக்கு 24 வயது தான் ஆகிறது. இந்த சிறு வயதிலேயே இவர் மாரடைப்பால் இறந்திருக்கும் சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement