ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை – பிரபலங்களின் திருமண உடைகளின் விலை – இத வச்சி ஒரு கல்யாணத்தையே முடிச்சிடலாமே

0
2421
- Advertisement -

ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை தங்களுடைய திருமணங்களில் அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த விபரம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் நடிகர்களுக்கு இணையான அந்தஸ்தில் நடிகைகள் இருக்கிறர்கள். அதிலும் சமீப காலமாக நடிகைகளை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பிரபலங்கள் திருமணம் என்றாலே திருவிழா போன்று கொண்டாடுவார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சினிமா உலகில் உள்ள நடிகைகளும் தங்களுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி அதனுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய சினிமாவில் பிரபலமாக திகழும் நடிகைகள் தங்களின் திருமணங்களில் அணிந்திருந்த ஆடை குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய்:

உலக அழகி என்ற பட்டத்தை பெற்றவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழில் இவர் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் தான் மிக பிரபலமான நடிகையாக இருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தின் போது அணிந்து இருந்த ஆடையின் விலை 75 லட்சம். நீதா லுல்லா என்ற ஆடை வடிமைப்பளார் பாரம்பரிய காஞ்சிபுரம் ஆடையில் அழகான தங்க பார்டர், படிகங்கள், உண்மையான தங்கத்தின் நூல் வேலைப்பாடுகளுடன் ஐஸ்வர்யா ராய் புடவை உருவாக்கப்பட்டு இருந்தது.

ஷில்பா ஷெட்டி:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதோடு இவருக்கு என்று இந்தியா முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் ராஜ் குந்தராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண புடவையின் விலை 50 லட்சம். திருமணபுவையில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

அனுஷ்கா சர்மா;

பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பல ஆண்டுகளாக காதல் செய்து 2017 ஆம் ஆண்டு காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் அனுஷ்கா அணிந்திருந்த உடையின் மதிப்பு 30 லட்சம்.

பிரியங்கா சோப்ரா:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் தன்னுடைய வயதில் சிறியவரான நிக் ஜோசன் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா தன்னுடைய திருமணத்தில் சிந்தூர் சிவப்பு நிற லெகங்காவை அணிந்திருந்தார். இதனுடைய மதிப்பு 13 லட்சம்.

தீபிகா படுகோன்:

பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரோடு திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. தீபிகா தன்னுடைய திருமணத்தில் லெகங்காவை அணிந்திருந்தார். அதனுடைய மதிப்பு 13 லட்சம்.

ஆலியா பட்:

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆலியா பட். இவர் தன்னைவிட வயது அதிகமான ரன்பீர் கபூரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதல் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. பின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் வீட்டிலேயே எளிமையாக நடந்தது. திருமணத்தில் ஆலியா அணிந்திருந்த புடவையின் மதிப்பு 50 லட்சம்.

நயன்தாரா:

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. நயன்தாரா தன்னுடைய திருமணத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். அதனுடைய மதிப்பு 25 லட்சம்.

Advertisement