ஒய் திஸ் கொலவெறி பாடலால் தான் 3 படம் வரவேற்பை பெறவில்லை என்று ரஜினி மகள் ஐஸ்வர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார். ஐஸ்வ்ர்யாவிற்கும் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றது.

இதனிடையே தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியருக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தது ரசிகர்களை வலைதள அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. 18 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக மாறியது.

Advertisement

ஐஸ்வ்ர்யா தமிழில் 3,வைராஜா வை, லால் சலாம் போன்ற இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானது 3 படம் மூலம் தான். தனுஷ், சுருதி ஹாசன், பிரபு என்று பலர் நடித்து இருந்த இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. சொல்லப்போனால் அனிருத்துக்கு இந்த படம் தான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அனிருத்.

Advertisement

இந்த படத்திற்கு முக்கிய அங்கீகாரமாக இருந்தது இந்த படத்தில் இடம்பெற்ற Why This Kolaveri பாடல் தான். இந்த படம் வரும் முன்பே இந்த பாடல் வெளியாகி இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆனது. சொல்லப்போனால் இந்த பாடல் தான் இந்த படத்திற்கு ஒரு ப்ரோமோஷனாக அமைந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலால் தான் படத்திற்கு ஒரு பாதகமாக அமைந்துவிட்டது என்பது போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.

Advertisement

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் Why This Kolaveri, ’3’ படத்துக்கு அது ஒரு அழுத்தமாக மாறிவிட்டது. என்னை பொறுத்தவரை அது ஆச்சர்யம் என்பதை விட அதிர்ச்சிதான். ஏனெனில் படமாக நான் சொல்லிக் கொண்டு இருந்தது வேறு. ஆனால் அந்த பாடல் படத்தையே விழுங்கி, அதை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.பாடல் ஓவர் ஷேடோ செய்துவிட்டது.

கதைக்கு முக்கியவத்துவம் உள்ள ஒரு படத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதன் ரிலீஸின் போது கூட யாரும் அதைப் பற்றி பேசவில்லை. அது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும்போது பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள். அது ரிலீஸ் ஆகும்போது கிடைக்காத வரவேற்பு இப்போதுதான் கிடைக்கிறது. காரணம் அந்த பாடல் அந்த படத்தை மறைத்துவிட்டது. அந்த பாடல் படத்துக்கு உதவியதா என்றால் இல்லவே இல்லை. நிறைய பேரின் வாழ்க்கைக்கு உதவியது என்றால் அது நல்ல விஷயம் தான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement