விவாகரத்துக்கு பின்னும் தனுஷை மறக்காத ஐஸ்வர்யா ? – ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்

0
629
dhanush
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த சர்ச்சைகள் தான் அதிகம் போய்க் கொண்டிருக்கின்றது. சமந்தா – நாக சைதன்யா விவகாரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் பிரபலமான இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

மேலும், 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன தனுஷ்- என்று தெரியாமல் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவித்ததில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் அவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த படங்கள்:

சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் கிரேட் முடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் அவர்கள் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தை ஐதராபாத்தில் தான் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத வகையில் ஐஸ்வர்யாவை சந்தித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா இயக்கிய பாடலின் போஸ்டர்:

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது ஒருவரை ஒருவர் கடந்து பேசாமல் சென்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்தப் பாடலின் போஸ்டர் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் ஒரு வண்டி சாலையின் நடுவில் நின்றிருப்பது போல காட்டப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வண்டி வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷ் வைத்திருந்தது போலவே இருக்கிறது என சொல்லத் தொடங்கி இருக்கின்றனர். விவாகரத்துக்கு பின்னும் தனுசை அவர் மறக்கவில்லை என்பது இந்த போஸ்டர் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Advertisement