திருமணத்திற்கு பின் படு குண்டாக மாறிய சன் மியூசிக் ஐஸ்வர்யா. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
124436
aiswarya

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்று விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர். சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் ,மகாபாரத தொடர் போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஐஸ்வர்யா தொகுப்பாளினியாக தேர்வான சம்பவம் மிகவும் சுவாரசியமானது. உண்மையில் ஐஸ்வர்யாவின் சகோதரர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த நேர்காணலில் தேர்வாகவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த ஐஸ்வர்யாவை தொகுப்பாளினியாக தேர்வு செய்துள்ளனர். அதன் பின்னர் இவர் தனது பயணத்தை தொகுப்பாளினியாக தொடர்ந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்தது நடனமாடினார் ஐஸ்வர்யா.

இதையும் பாருங்க : அழகி பட நடிகர் சின்ன பார்த்திபனா இது. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திருமணத்திற்கு பின்னர் படு குண்டாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் மிகவும் வியந்து போய்யுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தற்போது தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள ஐஸ்வர்யா, பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உடற் பயிற்சி டிப்ஸ்களை கூறி தனது சமூக வலைதளத்தில் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அமெரிக்கா சென்றாலும் கரகாட்ட கலையை மறவாமல் இருக்கும் ஐஸ்வர்யா, இன்ற தலைமுறையினருக்கு ஏற்றவாறு வெஸ்டர்ன் இசைக்கு கரகாட்டம் ஆடி சில வித்யாசமான விடீயோக்களையும் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை பல்வேறு நபர்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement