கைதி ஹிந்தி ரீமேக்கில் செய்யப்படவுள்ள முக்கிய மாற்றம் – கழுவி ஊற்றும் ரசிகர்கள். படமே சொதப்பிடுமே.

0
2623
kaithi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், பொன்வண்ணன், மகாநதி சங்கர், ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.

-விளம்பரம்-
Image result for hrithik roshan in kaithi remake

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதையும் பாருங்க : 4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.

- Advertisement -

இந்த படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் பல பாலிவுட் நடிகர்கள் கைதி படத்தை பார்த்து உள்ளார்கள். இதனால் பாலிவுட்டில் இந்த படத்தில் நடிப்பதற்காக சில போட்டிகளும் இருப்பதாக தெரியவந்து உள்ளது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை செய்யவிருக்கின்றனர். அதாவது தற்போது இந்த படத்தில் மனைவி கதாபாத்திரத்தை சேர்க்கவுள்ளதாகவும், மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு மொழயில் இருந்து மற்ற மொழிக்கு ரீ-மேக் செய்யப்படும் படங்களில் ஒரு சில மாற்றங்களை செய்து வெளியிடுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கைதி படத்தில் கதாநாயகியை சேர்த்தால் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை கெடுத்தது போல இருக்கும் என்பதே பலரின் கருத்து.

-விளம்பரம்-
Advertisement