அந்த படத்தில் அப்படி சொன்னதால் தான் மோகன் மார்கெட் போயிடுச்சி - அஜித் சொல்லியுள்ள காரணத்தை பாருங்க.

By Rajkumar · 2/1/2022

தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகன். இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.

ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையும் பாருங்க : கேலிக்கு உள்ளான சித்தின் 'கர்ணன்' பாட்டு - சீர்காழி கோவிந்தராஜன் மகன் சீர்காழி சிதம்பரம் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

80ஸ் வசூல் மன்னன் மோகன் :

மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 1999 ஆம் அன்புள்ள காதலக்கு என்ற படத்தை இயக்கினர். அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1472820499134574592

மோகன் மார்க்கெட் போக காரணம் :

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் மோகன் சினிமாவில் மரக்கட்டில் சரிவை கண்ட காரணம் குறித்து அஜித் சொன்னதாக பிரபல இயக்குனர் ராஜ்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் பேசிய அவர் ' நீ வருவாய் என படத்தில் நடிக்க முதலில் விஜயிடம் பேசினோம். அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் கெஸ்ட் ரோலில் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தார். பின் அஜித் இடம் மெயின் ரோல் பண்ண கேட்டு இருந்தோம்.

மோகன் குறித்து அஜித் :

ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு அஜித் சொன்னது, பொதுவாகவே ஹீரோயின் ஹீரோவை கடைசி வரை பிடிக்கல என்று சொன்னால் அது நன்றாக இருக்காது. மௌன ராகம் படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்து இருந்தார். படத்தில் ரேவதி கடைசி வரை அவரை வேணாம் வேணாம் என்று சொன்னதால் தான் அந்த படத்திற்கு பிறகு மோகனுக்கு மார்க்கெட் குறைந்தது.

விஜய்க்கு பதில் வந்த பார்த்திபன் :

அதேபோல் கார்த்திக் அந்த படத்தில் சில காட்சிகளில் வந்து இருந்தாலும் அந்த படத்துக்கு பிறகு அவருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் கிடைத்தது என்று சொன்னார். அப்புறம் தான் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார். பார்த்திபனை மெயின் ரோலில் நடிக்க வைத்தோம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மோகன் 13 வருடங்கள் கழித்து 'ஹரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full