தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.
சினிமாவில் பாடுவதுமட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வரும் சித், சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை விழாவில் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி நெட்டிசன்கள் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார் சித். இப்படி ஒரு நிலையில் சித் ஸ்ரீராமின் இந்த பாடல் குறித்து பேசி இருக்கிறார் பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மகனும் பாடகருமான டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்.தமிழ் சினிமாவில் எத்தனையோ வரலாற்று கதைகள் வந்து இருக்கிறது. அதிலும் அந்த காலத்து படங்களில் இதிகாசகதைகளை மையமாக கொண்டு பல படங்கள் வந்து இருக்கிறது.
‘சீர்காழி பாடலை சீரழித்த சித்’ :
அந்த வகையில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வந்த படம் ‘கர்ணன்’. சிவாஜி கணேசன் இந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இறுதி காட்சியில் கர்ணன் கதாபாத்திரம் போரில் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவரிடம் கண்ணன் படுவது போல இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடலை பழம் பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தனது அற்புதமான குரலில் பாடி இருப்பார்.
சீர்காழி சிதம்பரம் :
இது குறித்து பேசியுள்ள அவர், இந்த பாடலில் கர்ணனுக்கு இப்படி நடந்து விட்டதே என்று கண்ணன் கனத்த இதயத்துடன் பாடியிருப்பார். அவரின் மனதில் இருந்த கணத்தை என்னுடைய அப்பா அவரது குரலில் அப்படியே பிரதிபலித்து இருப்பார். இந்த படம் வெளியான போது எனக்கு ஐந்து வயது தான். சிறு வயது முதல் அப்பாவின் பாடல்களை கேட்டு வளர்ந்து இருக்கிறேன். அப்பாவின் பாடல்களில் இந்த பாடல் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். எந்த நிகழ்ச்சியில் இந்த பாடலை பாடினாலும் இரண்டு பேராவது கண்ணீர் விட்டு விடுவார்கள்.
சித் ஸ்ரீராம் குறித்து :
சூப்பர் சிங்கர் கூட இந்த பாட்டை பாடினால் அவர்கள் தேர்வாகி விடுவார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த பாடல் நிலைத்து நிற்கிறது. இந்த பாடலை தன்னுடைய ஸ்டைலில் சூப்பர் சிங்கரில் முத்துசிற்பி பாடியிருந்தார். அது ஒருவிதமான மகிழ்ச்சியை தந்தது. அதேபோலத்தான் சித் ஸ்ரீராமும் தன்னுடைய முயற்சியில் பாடியிருக்கிறார். இதுவும் ஒரு மகிழ்ச்சி தான்.
இதைத்தான் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை :
பொதுவாக நல்ல பாடகர்கள் வேறு ஏதாவது பாடலை பாடும்போது தங்களின் திறமையை நிரூபிக்கதங்கள் ஸ்டைலில் பாடுவார்கள். ஆனால் ,எங்கள் காலகட்டத்தில் அப்படி கிடையாது. ஒரு பாடகர் அந்த பாடலை எப்படி பாடினாரோ அப்படித்தான் பாட வேண்டும். ஆனால் இப்போது அப்படி கிடையாது சித் ஸ்ரீராம் அவருடைய சுதந்திரத்தில் அவர் பாடியிருக்கிறார். அதில் தவறு ஒன்றும் கிடையாது. ஒரு இலக்கணத்தை அமைத்துவிட்டு அது மாற்றப்படும்போது பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
சித் பாடியது ஒரு மசாலா காபி :
எனக்கு வெறும் காபி மட்டும் கொடுங்கள் கண்டதை போட்டு காப்பிய மறந்து போச்சு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் அதேபோல சிலர் மாற்றியும் காப்பி கேட்டுக் கொள்கிறார்கள் அதனால் சித்ஸ்ரீராம் பாடியதை ஒரு மசாலா காபி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் இதை கதை என்று சொன்னால் அது அவர்களின் சுதந்திரம் அவர் பாடியதை நான் இரண்டு வரிகள் தான் கேட்டேன் ஆனால் என்னை அந்த பாட்டை மாற்றிப் பாட சொன்னால் நான் பாட மாட்டேன் என்றும் அப்பா போட்ட கோட்டில் நிற்பவன் நான் அவர் அளவிற்கு யாரும் பாட முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து என்று கூறியுள்ளார்.