தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளை தொடர்ந்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்தது.
அஜித் குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் கார் ரேசிங்கிலும், தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அஜித் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அஜித், கூட்ட நெரிசலால் தமிழகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த கூட்ட நெரிசலுக்கு அந்த தனி நபர் மட்டும் பொறுப்பு கிடையாது.

அஜித் பேட்டி:
நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கூட்டத்தை கூட்டுவதில் நாம் இன்று ஆர்வம் காட்டி வருகிறோம். இதனை பெரிய விஷயமாக ஆக்குவதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். திரையரங்கில் மட்டுமே கூட்ட நெரிசல் வருவது ஏன்? சினிமா பிரபலங்கள் இருக்கும் இடங்களில் இந்த மாதிரியான விஷயங்கள் நிகழ்வது ஏன்? அது திரைத்துறையை பற்றி உலகத்திற்கு தவறான புரிதலை தருகிறது.
https://www.youtube.com/watch?v=E63PjNEkPNU
கரூர் சம்பவம் பற்றி சொன்னது:
நாங்கள் இதை விரும்பவில்லை. மக்களுடைய அன்பு எங்களுக்கு தேவை. அதற்காக நாங்கள் கடினமாக உழைக்கிறோம். நாங்கள் குடும்பத்தை பிரிந்து தூக்கம் இல்லாமல் கடினமாக உழைப்பதும் அதற்காகத்தான்.
ஆனால், உங்களுடைய அன்பை காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றது. ஊடகங்களும் இந்த முதல் நாள் முதல் காட்சியை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்






