பில்லா படத்தின் நீச்சல் குள காட்சியல் நடித்த நயன் குறித்து அஜித் இதை தான் சொன்னாராம்.

0
77671
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அஜித்துடன் நடிகை நயன்தாரா, பில்லா, ஆரம்பம், ஏகன், விசுவாசம் என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், நடிகை நயன்தாராவிற்கு மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது என்னவோ பில்லா படத்தின் மூலம் தான். இந்த படத்தில் தான் நடிகை நயன்தாரா முதன் முறையாக பிகினி உடையில் நடித்திருந்தார். இந்த ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றும் மறக்கமுடியாத ஒன்று தான்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த காட்சியில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்தது குறித்து ஒரு சுவாரசியமான தகவலை புகைப்பட கலைஞர் ஜானி என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித் சார் கிட்ட நான் இந்த பேமஸ் சீன் பத்தியும், நயன்தாரா பத்தியும் கேட்டப்ப சொன்னாரு, “நான் ஒரு நடிகன், அவங்க ஒரு நடிகை, இயக்குனர் என்ன சொல்றாரோ அத கேட்டு நடிச்சோம். அதுக்கு மேல ஒண்ணும் இல்ல ஜான்” நிஜமாவே மனுசன் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நயன் மட்டும் விரதமில்லை ஓட்டு மொத்த படக்குழுவும் விரதம் இருந்ததாம்.

-விளம்பரம்-
Advertisement