கமல் சாரை அப்படி அழைக்காதீங்க. பெண்ணுக்கு அட்வைஸ் செய்த அஜித் – வைரலாகும் பழைய வீடியோ.

0
6224
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார், தல என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இவர். இவரை போல தமிழ் சினிமாவில் உயர்ந்தவர் தான் கமல் ஹாசனும். இந்த நிலையில் கமலை பேர் சொல்லி அழைத்ததால் பெண் ரசிகைக்கு அறிவுரை சொன்ன அஜித்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
kamalajith

அஜித் பேட்டி கொடுத்தோ, பொது நிகழ்ச்சியில் பங்குபெற்றோ பல ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ பட சமயத்தில் நடிகர் அஜித், ஜெயா டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேட்டியில் நடிகர் அஜித்தை சந்தானம் தான் பேட்டி எடுத்தார். அதே போல அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார் அஜித். அப்போது பெண் ரசிகை.

- Advertisement -

அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணிடம் கமல் சார், நாட் கமல் என்று மெதுவாக சொல்லிகொண்டே இருந்தார் கமல், இருப்பினும் அந்த பெண் கமல் என்று சொல்லிகொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் நடிகர் அஜித் ‘Mr.கமல்ஹாசன் அல்லது கமல் சார், கமல் கிடையாது ‘ என்று கமலை பேர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னார்.

வீடியோவில் 23 நிமிடத்தில் பார்க்கவும்

அதன் பின்னர் அந்த பெண்ணும் ‘ஓகே கமல் சார்’ என்று அவரது பேச்சை துவங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் நடிகர் அஜித், சீனியர் நடிகர்கள் மீது எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையையும் வைத்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement