தோணியால் வந்த வினை..! தல அஜித் ரசிகர்களை வெறுப்பேத்திய சென்னை சூப்பர் கிங்…!

0
1129
Dhoni

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் மட்டுமே. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் நடித்த போது இவருக்காக தல என்ற பெயர் கிடைத்தது. பின்னர் அந்த பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக அவர்களும் அஜித்தை அந்த படைத்திற்கு பிறகு தல என்று தான் அழைத்து வருகின்றனர்.

Actor ajith

இந்நிலையில் ஐபில் போட்டிகள் தொடங்கிய போது தோனி சென்னை அணியில் ஆடத்துவங்கினார். அப்போது வெளியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலில் நம்ம தல தோணி என்று கூறப்பட்டது. அதன் பின்னர் தோனியும் சென்னை அணியிலேயே இருந்து வந்ததால் தமிழ் ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டின் தல என்று அனைவரும் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் இதுவரை அஜித்தின் ரசிகர்கள் தோனியை தல என்று அழைத்து வந்ததிற்கு பெரிதாக ஆச்சயபனை தெரிவித்தது இல்லை. ஏனெனில் அஜித் ரசிகர்களில் பல பேர் தோனி ரசிகர்களாகவும் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோனி அபாரமாக ஆடியதால் அவரை ஒரேய தல என்று அழைத்து வருகின்றனர். இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்து கோவத்தில் உள்ளனர்.

ms dhoni

எப்போதும் இந்த விஷயத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேதான் தல பெரியவரா தளபதி பெரியவரா என்ற வாக்குவாதம் அடிக்கடி வந்துகொண்டிருக்கும். ஆனால் அவர்கள் கூட தற்போது ஓரளவிற்கு இதைபற்றியெல்லாம் பேசுவது கிடையாது. ஆனால் தற்போது இதே பிரச்னை அஜித் மற்றும் தோனியை வைத்து மீண்டும் கிளம்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று கடுப்பை கிளப்பியுள்ளது.