ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது..! இப்போது கலைஞர் மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது..!

0
1612
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று(ஆகஸ்ட் 7) காலமானார். தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

thala-ajith

- Advertisement -

திரைத்துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்களும் ,கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித் அவர்கள் இன்று காலையே தனது மனைவி ஷாலினியுடன் சென்று கலைஞரின் உடலுக்கு மரியாதையை செலுத்திவிட்டு வந்துவிட்டார்.

ஆனால், அஜித்திற்கு இணையாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக கருதப்படும் நடிகர் விஜய் அமெரிக்காவில் ஷூட்டிங்கில் இருப்பதால் அவர் இன்னும் சென்னை வந்தடையவில்லை. இதனால் கலைஞரின் இருப்பிற்கு விஜய்கு முன்பாகவே அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டார் என்ற பேச்சும் பரவலா பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்வோம். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது அஜித் அவர்கள் பல்கேரியாவில் படப்படிப்பில் இருந்தார். அதனால் அவர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு தாமதமாக வந்தார்.

vijay-actor

ஆனால், அப்போது சென்னையில் இருந்த விஜய், அஜித்திற்கு முன்பாகவே ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டார். அதே போல தற்போது விஜய் ‘சர்கார் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். அதனால், முதற்கட்டமாக கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் “சர்கார் ” படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனர்.

மேலும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய் சென்னை வந்தடைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் கலைஞர் இறுதி சடங்கில் பங்குகொள்வாரா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அதே போல ஜெயலலிதாவின் மறைவின் போது தாமதமாக வந்த அஜித், ஜெயலலிதா மறைவின் அடுத்த நாள் தான் நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்தினார். ஒருவேளை அதே போல நடிகர் விஜயும் அமெரிக்காவில் இருந்து வர தாமதம் ஏற்பட்டால் கலைஞரின் இறுதி சடங்கில் பங்குகொள்வது சந்தேகமாகிவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement