அஜித் பிறந்தநாளுக்கு டீஸர் வெளியாகுமா இல்லையா.! வெளியான தகவல் இதோ.!

0
935
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Ajith-Birthday

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’படத்தின் ரீமேக் என்பது தெரியும். அதில் அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடித்திருந்தனர்.

- Advertisement -

தற்போது தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித்தும் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவளின்படி அஜித்தின் பிறந்தநாளன்று நேர்கொண்ட பார்வை படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாக போவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement