ட்ரம்ஸ் கலைஞருடன் திருமணம், தோலுக்கு மேல் வளர்ந்துள்ள மகன் – ஆள் அடையாளம் மாறிப்போன சிட்டிசன் பட நடிகை.

0
2782
Vasundhara
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் ரசிகர்கள் பார்த்து ரசித்த எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2000ம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான ஹேராம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். சிறு வயதிலிருந்தே பாடகி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தார்.

-விளம்பரம்-
vasundhara das

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல பாடல்களை பாடிய இவருக்கு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஹேராம் மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவ்வளவு ஏன் ‘மான்சூன் வெட்டிங்’ என்ற ஆங்கில திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார். இறுதியாக 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஏக் தஸ்தக்’ ஆங்கில திரைப்படத்திலும் படத்தில் கூட நடித்திருந்தார்.

Image result for vasundhara das

அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர் டிரம்ஸ் கலைஞரான ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் படு குண்டாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் வசுந்தரா.

-விளம்பரம்-
Advertisement