ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் பார்ட்டி – அஜித் மகன் மரும் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க.

0
379
ajith
- Advertisement -

ஹீரோயினி போல இருக்கும் அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது .இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித் குடும்பம்:

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அஜித் அவர்கள் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. ஷாலினியும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இருவரையுமே அஜித் மீடியா பக்கம் கொண்டு வராமல் இருக்கிறார். மேலும், அஜித் தன் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

இந்த நிலையில் நேற்று ஷாலியின் பிறந்தநாளை அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். அப்போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதில் அஜித்தின் மகளைப் பார்த்த பலருமே, தமிழ் சினிமாவிற்கு புது ஹீரோயினி கிடைச்சாச்சு! ஹீரோயினி போல செம மாஸாக இருக்கிறார் என்றெல்லாம் கூறி புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement