அடேங்கப்பா.! விஸ்வாசத்தில் அந்த வசனம் விஜய்யை குறிப்பிடுகிறதா.! இதை கவனீச்சீங்களா.!

0
962

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டு கழித்து அதிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தல படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு டபுள் சந்தோசம்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தந்தை மகள் சென்டிமட்டில் ஒரு மாஸ் கலந்த அப்பாவாக தல இந்த படத்தில் ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளார். இந்த படத்தில் தல, தளபதியை பற்றி குறிப்பிட்டுள்ளார் என்ற ஒரு செய்தி இணையத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில் தனது மகளிடம் பேசிகொண்டே எதிரிகளை தும்சம் செய்வார் தல. அப்போது தனது மகளிடம் இதுவரை எத்தனை போட்டியில் மா ஜெயிச்சிருக்க என்று கேட்பார்.

Viswasam

அதற்கு அஜித்தின் மகள் 62 என்று சொன்னதும் ‘அடேங்கப்பா’ என்று தல கூறுவார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் விஜய் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். இந்த காட்சியை ஒப்பிட்டு தல, தளபதியை பற்றி தான் குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். உண்மையோ பொய்யோ தல தளபதி ரசிகர்கள் ஒற்றுமையாக இருந்தால் சரி.