தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார்.

பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட தீப்பெட்டி கணேசன் அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்து விட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான்.

Advertisement

தனக்கு உதவி செய்யுமாறும் இந்த செய்தியை எப்படியாவது அஜித் சாரிடம் சேர்த்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார். தீப்பெட்டி கணேசனின் இந்த நிலையை கண்டு அஜித் கண்டிப்பாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் அங்காடித்தெரு சிந்து. 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் விலை மாதுவாக நடித்த சிந்து சமீப காலமாக புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பின்னர் தொடர் சிகிச்சைக்கு பணமில்லாமல் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிந்து, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை ஒரு 10 முறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அஜித்தை தொடர்புகொள்ள முடியலன்னு சொன்னார். வெளியில் சொல்ராங்க அஜித்த பத்தி ஹாஹா ஓஹோனு. இந்த தீப்பெட்டி கணேஷுக்கு கூட அஜித் சார் பணம் குடுத்தார்னு சொல்றது எல்லாம் போய். அவருக்கு நான் தான் முதல் ஆளா போய் உதவி செய்தேன், செஞ்சா செஞ்சன்னு சொல்லிட்டு போங்க. ஏன் இப்படி பொய் சொல்ரீங்க.

Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஜென்டில் மேன் என்று பெயரெடுத்தவர். அதேபோல நடிகர் அஜித் பல உதவிகளை செய்துள்ளார் என்று பல பிரபலங்கள் கூறி தான் இதுவரை நாம் கேட்டுள்ளோம். ஆனால், உதவி கேட்டும் அஜித்திடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை என்று சிந்து கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

Advertisement
Advertisement