அங்க சுத்தி இங்க சுத்தி அஜித்தின் ரீல் மகளிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் - அதற்கு அவரின் பதிலை பாருங்க.

By Rajkumar · 21/2/2021

நடிகர் அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகாவிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் ஒன்றை கேட்டுள்ளார். வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர். நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர்.

அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : மெழுகுல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு - மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ. கலாய்க்கும் நெட்டிசன்கள்.

இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை அனிகாவிடமும் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் அனிகாவிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அவர், ஏன் இதையே கேட்டுக்கொண்டு இருக்கீங்க. நான் அந்த படத்தில் இல்லை என்று வேடிக்கையாக கூறி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் எதிர்பரக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் இறுதி கட்ட பணிகளும் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full