மெழுகுல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு – மைனா நந்தினி வெளியிட்ட வீடியோ. கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1178
Myna
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.சமீபத்தில் கூட தனது லோகேஷ் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். குழந்தை பிறந்ததற்கு பின்னர் நடிகை மைனா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால், தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார் மைனா.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு அழகாக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், மெழுகில் மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement