விஜய்-அஜித் ரசிகர்கள் செய்த செயலுக்கு ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் 28.5 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் நடனமாடிய தொட்டு தொட்டு பாடல் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடி இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:
தற்போது இந்த பாடல் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க சிம்ரன் இந்த படத்தில் கேமியா ரோலில் நடித்து இருக்கிறார். ஏற்கனவே சிம்ரன்- அஜித் இருவரும் இணைந்து வாலி, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்கள். தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் தாக்கியிருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்-அஜித் ரசிகர்கள்:
அதாவது, குட் பேட் அக்லி படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் திரையரங்கில் Tvk Tvk என்று கத்திருக்கிறார்கள். உடனே அங்கிருந்த அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை சூழ்ந்து கொண்டு அடி வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பல வருடங்களாகவே அஜித்- விஜய் ரசிகர்களுக்கிடையே மோதல் இருப்பது அனைவரும் அறிந்ததே.
GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 12, 2025
சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி.pic.twitter.com/RJpc3K9Axu
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இதற்கு இரு தரப்பு நடிகர்களுமே வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இருந்தும் திரையரங்கில் விஜய்- அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டதை நெட்டிசன்கள் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவில், GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி. சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி என்று கூறி இருக்கிறார்.






