ஏற்கனவே ஷாட் கன்ல ஸ்கோப்பானு கேலி பன்றாங்க – இதுல இவங்க பெயரையே தப்பா போட்டு வச்சிருக்காங்கலே.

0
5559
ajith
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் வெளியானது.

- Advertisement -

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்களின் அப்டேட்டுகள் வெளியானால் அதனை கேலி செய்வதர்க்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்.

அந்த வகையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஷார்ட் கண்ணில் ஸ்கோப் பொறுத்தப்பட்டு இருப்பதை பலர் கேலி செய்து வருகின்றனர்.ஆனால், ஷார்ட் கண்ணில் ஸ்கோப் பயன்படுத்தப்படும் ஆதாரங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த போஸ்டரில் இருக்கும் எழுத்து பிழையை கட்னுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக ‘அன்பறிவு’ (Anbariv) என்ற ரெட்டையர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவர்கள் பெயருக்கு முன்னாள் Action என்று குறிப்பிடுவதற்கு பதிலாக Acton என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்ட அஜித் ரசிகர் பலரும் படம் பேர இங்கிலீஸ்ல வச்ச உங்களுக்கு ஆக்ஷன்க்கு ஸ்பெல்லிங் கூடவா தெரியாது என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement