விஜய் செய்ததை 20 ஆண்டுக்கு முன்னரே செய்துவிட்டாரா அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்

0
2108
- Advertisement -

20 வருடங்களுக்கு முன்னரே அஜித் இது செய்துவிட்டார் என்று ரசிகர்கள் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. பின் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார்.

விருது வழங்கிய விஜய்:

இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது. அந்த விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேடையில் விஜய் பேசியது:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும், அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் நடிகர் விஜயின் இந்த செயலை குறித்து தான் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அஜித்தின் சாதனை:

அதாவது, விஜய் மாணவர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை, சான்றிதழ் வாங்கிய புகைப்படம் வைரலான நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே எங்களுடைய தல அஜித் செய்து விட்டார் என்று இருபது வருடங்களுக்கு முன்பு அவர் பள்ளி மாணவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் செய்த உதவி குறித்த புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு, போங்க தம்பி நாங்கல்லாம் அப்பவே பண்ணிட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்

Advertisement