மாஸ்டர் படத்தில் சாந்தனுவின் நடிப்பை பாராட்டிவிட்டு பின்னர் டெலீட் செய்த பிரபலம் - சாந்தனுவின் ரியாக்ஷன்.

By Rajkumar · 31/1/2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : அட, விக்ராந்தின் மனைவி மற்றும் அம்மா இருவரும் சீரியல் நடிகைகள் தான் - அதுவும் அவங்க அம்மா இந்த பிரபல சீரியலில்.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. இருப்பினும் மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் கார் ரேஸ் தோழியான அலிஷா அப்துல்லா மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்து இருந்தார்.

ஆனால், இறுதியாக மாஸ்டர் படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். காயம் காரணமாக முதல் நாள் படத்தை பார்க்க முடியவில்லை. சாந்தனுவின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.சாந்தனுவின் ரோலை ஏற்கனவே நெட்டிசன்கள் கேலி செய்து வரும் நிலையில் இந்த டீவீட்டை பலரும் கலாய்த்தனர். இதனால் அந்த பதிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார் அலிஷா.

https://twitter.com/imKBRshanthnu/status/1355424173540089858

அதில், மாஸ்டர் படத்தை மீண்டும் பார்த்தேன். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள். குறிப்பாக விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதி சார் வசனங்களை சொல்ல வார்த்தை இல்லை. சாந்தனுவும் அவருடைய பகுதியை சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் வாழ்க்கையில் பட பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு நன்றி லோகேஷ் சார் என்று ட்வீட் செய்துள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள சாந்தனு 'நைட்டோட நைட்டா என்ன காலி பண்ண பாத்தியே தோழி ' என்று கமன்ட் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full