அட, விக்ராந்தின் மனைவி மற்றும் அம்மா இருவரும் சீரியல் நடிகைகள் தான் – அதுவும் அவங்க அம்மா இந்த பிரபல சீரியலில்.

0
7611
vikranth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான்.  சினிமாவில் 25 வருடத்தை நிறைவு செய்துள்ள விஜயின் இந்த வெற்றிக்கு அவரது அப்பா சந்திரசேகரும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.விஜயின் அப்பா ஒரு இயக்குனர், அம்மா ஷோபா ஒரு பாடகி. இப்படி ஒரு திரை பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் விஜய். இவரும் நடிகர் விக்ராந்தும் உறவினர்கள் ஆவர். விஜய்க்கு விக்ராந்த் சித்தப்பா மகன் ஆவார்.

-விளம்பரம்-

விஜயின் சகோதரரான விக்ராந்த், தமிழில் 2005 ஆண்டு வெளியான ‘கற்க கசடற ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாணவர் நடிகர் விக்ராந்த். இவர், நடிகர் விஜயின் தம்பி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.ஆனால், அதன் பின்னர் திரையுலகில் பல ஆண்டுகள் உழைத்து இன்று தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இதையும் பாருங்க : Breaking News : 11 வருடங்களாக இழுத்து வந்த வழக்கு – இயக்குனர் ஷங்கருக்கு அரஸ்ட் வாரண்ட்.

- Advertisement -

இவரின் ஆரம்பகால திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லலை.ஆனால், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கோரிபாளையம்’ என்ற படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையக அமைந்தது. அதன் பின்னர் ஒரு ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார் விக்ராந்த்.நடிகர் விக்ராந்திற்கு மானஸா என்பவருடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடிகர் விக்ராந்த் நடிகர் விக்ராந்தின் மனைவி சன் டீவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் மற்றும் அதேபோல் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘மக்களுடே அம்மே’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

விக்ராந்தின் மாமியார் கனகதுர்கா ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். மலையாள திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். அங்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் கணக்கதுர்கா. அதே போல விக்ராந்தின் அம்மாவான ஷீலா, நடிகர் விஜய்யின் தங்கை ஆவார். அவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மாவாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement