எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும், முயற்சியாலும் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் தல அஜித். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். சிறு நடிகர்கள் முதல் பெரிய பிரபலங்கள் வரை என பலரும் தல அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அந்த வகையில் தற்போது தல அஜித்தின் நெருங்கிய நண்பரான எம் கே ஹாரிஸ் அப்துல்லா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் அஜித் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். எம் கே ஹாரிஸ் அப்துல்லா அவர்கள் சென்னையில் மிகப் பிரபலமான Fruit Shop on Greams வைத்துள்ளவர்.

25 வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக சின்ன பழகடையை ஆரம்பித்த இவர் தற்போது சென்னையில் மிகப் பிரபலமான பல கடைகளை வைத்துள்ளார். தல அஜித் அவர்கள் சினிமா உலகில் நுழைவதற்கு முன்னிருந்தே இவருக்கும் அஜித்துக்கும் நல்ல பழக்கம். அதுகுறித்து இவர் பேட்டியில் கூறியிருப்பது, அஜித் அவர்கள் மாடலிங் பண்ணும் போது இருந்தே எனக்கு நன்றாக தெரியும். அஜித் சினிமா வாழ்க்கையில் கஷ்டப்பட்ட மாதிரி இன்னொரு நபரை பார்ப்பது ரொம்ப கடினம். அந்த அளவிற்கு அவர் மிகக் கடுமையாக உழைத்தார். அதனால் தான் தற்போது அவர் உச்சத்தில் உள்ளார். அவர் பெரிய ஸ்டார் ஆகிட்டாரு நான் ஜூஸ் கடைக்காரன் என்று ஜாலியாக கூறினார்.

Advertisement

மேலும், அஜித்துக்கு ஆசை படத்திற்கு முன்பாகவே ஒரு பட வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால், அந்த இயக்குனர் இறந்து விட்டதால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன் பின்னர் தான் அவருக்கு ஆசை பட வாய்ப்பு கிடைத்தது. என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இவர் சினிமாவில் அவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் யார் மீதும் வெறுப்பு, கோபத்தையும் காண்பிக்க மாட்டார். இப்ப அவருடன் நான் தொடர்பில் இல்லை. ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி கூட ஒரு நாள் அஜித்தை வீட்டிற்கு வெளியே பார்த்தேன்.

வீடியோவில் 13 நிமிடத்தில் பார்க்கவும்.

அவர் சாதாரணமாக சிலிண்டர் எடுத்துக் கொண்டு சென்றார். அந்த அளவிற்கு ரொம்ப எளிமையான மனிதர். தாம் ஒரு ஸ்டார், பெரிய பிரபலம் என்ற ஒரு பந்தா எதையுமே காண்பித்துக் கொள்ள மாட்டார். சமீபத்தில் கூட அவரை நான் சந்தித்தேன். நான் ஆரம்பத்தில் எப்படிப் பார்த்தேனோ அதே போல் தான் அப்படியே மாறாமல் அஜித் உள்ளார். அவருடைய மனித நேயத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அந்த அளவுக்கு நல்ல மனிதர் என்று அஜித் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement
Advertisement