வீரம் படத்தை தொடர்ந்து இந்தியில் ரீ மேக் ஆகும் அஜித்தின் மாஸ் படம்.!

By Rajkumar · 14/6/2019

சமீப காலமாக தமிழ் வெளியான பல படங்கள் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடித்த கஜனி படம் துவங்கி சிங்கம், சிறுத்தை வரை இந்தியில் ரீ மேக் செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம் ' திரைப்படம் இந்தியில் வெளியாக உள்ளது.

முதலில் வீரம் படம் தமிழில் எடுக்கப்பட்டவுடன், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் செம ஹிட் அடித்தது. இதனை அடுத்து வேதாளம் படத்தையும் பவன் கல்யாண் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பவனின் அரசியல் பிரவேசம் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்க : எம் எஸ் பாஸ்கர் மகளுக்கு திருமண நிட்சதார்த்தம் முடிந்தது.! மாப்பிளை இவர் தான்.! 

இந்நிலையில் இந்த இவ்விரு படங்களையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேசி வருவதாகவும். முதலில் வீரம் படத்தை ஹிந்தியில் ரீ மேக் செய்ய இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கடந்த வாரமே செய்திகள் உலா வர தொடங்கிவிட்டன. தற்போது வேதாளம் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஜான் ஆப்ரஹாமை பேசி வருவதாக மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.

அதே போல வீரம் படத்தின் இந்தி ரீ -மேக்கில் அதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க போவதாகவும் தகவல்கள்வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் அக்சய் குமாருக்கு பதிலாக இளம் நடிகரான விக்கி கௌசலை தேர்வு செய்துள்ளனர்.

அக்சய் குமார் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கிய 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீ மேக்கான 'ரௌடி ரத்தோர் ' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் வீரம் ரீ மேக்கில் அக்சய் குமார் நடிக்க முடியாமல் போனதை எண்ணி அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full