தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர்.
இதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் சமீபத்தில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார் ஆதித்யா பாஸ்கர்.
இதையும் படியுங்க : நயந்தாராவின் மாமாவாக வாய்ப்பு கொடுங்கள்.! முருகதாஸை கெஞ்சிய ஹாலிவுட் பிரபலம்.!
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க அவரை போன்றே தோற்றமுடைய ஒரு நபரை இந்த படத்தின் இயக்குனர் தேடி வந்தாராம். அதன் பின்னர் நடிகர் எம் எஸ் பாஸ்கரன் மகன் ஆதித்யாவை பார்த்த இயக்குனர் பிரேம், பின்னர் அதித்யா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினாராம்.
தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளும் ஆதித்யா பாஸ்கரின் தங்கையுமான ஐஸ்வர்யா பாக்ஸரருக்கு , அகில் என்பவருடன் திருமண நிட்சயதார்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்று (ஜூன் 13) சென்னையில் நடைபெற்ற இந்த நிட்சயதார்த்த நிகழ்ச்சியில் எம் எஸ் பாஸ்கரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் பிரபு கலந்துகொண்ட புகைப்படம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.