அஜித் மேனேஜர் திடீரென வெளியிட்ட கழுதை கதை புகைப்படம் – சிவாவுடன் படம் வேண்டாம் என்று சொன்னதால் அஜித் இப்படி சொல்லிட்டாரோ ?

0
304
ajith
- Advertisement -

அஜீத் மேனேஜர் திடீரென வெளியிட்ட அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இவருடைய படங்கள் வெளிவருகிறது என்று சொன்னாலே போதும் திருவிழா போல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அதோடு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நோக்கி சென்று இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : ‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ – அமைச்சர்கள் தீர்மானம் நிறைவேற்றம். உதயநிதி வெளியிட்ட அதிரடி அறிக்கை.

- Advertisement -

ஏகே 61 படம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:

குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பதாக கூறி இருந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

இந்த நிலையில் அஜீத்தின் மேனேஜர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக, மேனேஜர் மூலமாக தான் அஜித் அறிக்கை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட தன்னை யாரும் இனி தல என்று குறிப்பிட வேண்டாம் என்று அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார் இப்படி ஒரு நிலையில் இன்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒரு கணவன், மனைவி, ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள்.

மேனேஜர் போட்ட டீவ்ட்:

நான் எது செய்தாலும் உலகம் முழுவதும் பேசிக் கொண்டே தான் இருக்கும். எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் சுரேஷ் சந்திரா யாருக்காக? இப்படி ஒரு கருத்தைக் கூறினார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் படம் செய்கிறார்கள் என்கிற தகவல் வந்ததிலிருந்து அஜித் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை அதற்காகத் தான் இப்படி ஒரு கருத்தை அஜித் கூறினாரா? என்று பலரும் விவாதம் செய்கின்றனர்.

Advertisement