அஜித்தின் கட் அவுட் சரிந்து விழுந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் வந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார்.
குட் பேட் அக்லி படம்:
கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் உள்ள பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் குட் பேட் அட்லி படத்தினுடைய ரிலீஸை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் 285 அடி உயரமுள்ள ஒரு மிகப்பெரிய கட் டவுட்டை வைத்திருந்தார்கள். இந்த வேலையை ரொம்ப உற்சாகத்துடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.

அஜித் ரசிகர்கள் செய்தது:
நேற்று இந்த கட்டவுட் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. நல்ல வேலை இந்த விபத்தில் யாருக்குமே எந்த அடியும் படவில்லை. இந்த கட்டவுட் சரிந்து விழுந்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களுக்கு இந்த சம்பவம் அதிருத்தியை கொடுத்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு காரணம், கட் டவுட் அமைப்பதில் நடந்த அலட்சியம்தான் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான கட்டவுட்டுகளை வைப்பதற்கு சரியான திட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரொம்ப முக்கியம். ஆனால், இந்த கட்டவுட் அமைப்பதற்கு முன்பு, மேல் பகுதி காண பணிகள் தொடங்கி விட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=EcIJ9z7lE8w
கட்டவுட் சரிந்த காரணம்:
அதனால் அடிப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலே கட்டவுட் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது. காற்று வீசும் அழுத்தத்தை சமாளிக்க பேனர்களில் ஓட்டைகள் இல்லாததால் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் கட்டவுட் சரிந்து விழுந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பு நடிகர் சூர்யாவுக்கு 275 அடி உயரத்தில் கட்டவுட் வைத்த சாதனையை முறியடிக்க தான் அஜித் ரசிகர் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தோல்வில்தான் முடிந்தது.






