பிரபல நடிகர் அஜித் நடிகை ஹீரா குறித்து அளித்திற்கும் பழைய பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் பங்கு பெற்று 991 பிரிவில் மூன்றாவது பரிசை தட்டிச் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதற்க்குப்பின் தன்னுடைய அணியினர் மற்றும் தன்னுடன் இருந்தவர்களுக்கு அஜித் நன்றி சொல்லி பேசி இருந்தார்.
அஜித் ஷாலினி கெமிஸ்ட்ரி :
அதுமட்டுமில்லாமல் தன்னை இந்த ரேசிற்கு அனுமதித்த என் மனைவி ஷாலினிக்கும் ரொம்ப நன்றி என்று அஜித் பேசி இருந்தார். அஜித் பேசியதை கேட்டு ஷாலினி க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்திருந்தார். இந்த ரேஸில் அஜித்தை என்கிரேஜ் செய்ய ஷாலினி தன்னுடைய பிள்ளைகளுடன் துபாய் சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்து பலரும் அஜித் மற்றும் ஷாலினிக்கு கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அஜித்- ஹீரா காதல் :
இது ஒரு பக்கம் இருக்க, ஷாலினி அஜித் வாழ்க்கையில் வருவதற்கு முன்பாக அஜித்துக்கு நடிகை ஹீரா உடன் இருந்த காதல் பற்றிய செய்திகள் தான் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதாவது 'காதல் கோட்டை' திரைப்படத்தின் போது தான் ஹீராவும் அஜித்தும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போதுதான் அவர்களுக்கு இடையேயான நட்பு வளர்ந்து நெருங்கிய நண்பர்கள் ஆனார்களாம். அதனைத் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து நடித்த 'தொடரும்' திரைப்படத்தில், காதல் மலர்ந்து இருவரும் காதலர்களாக வலம் வரத் தொடங்கினார்கள்.
உறவில் விரிசல்:
மேலும், அஜித் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ஹீராவுக்கு காதல் கடிதங்கள் எல்லாம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு கூட இருந்தார்களாம். ஆனால், ஹீராவின் அம்மா அஜித்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லையாம். அதற்குக் காரணம், சின்ன வயதிலேயே ஹீரா கல்யாணம் செய்து கொண்டால் ஹீராவின் கேரியர் காலியாகி விடும் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனையடுத்து தான் அஜித் மற்றும் ஹீராவின் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

ஹீரா குறித்து அஜித் :
அதோடு ஹீராவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் அவர்களது காதல் முறிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் இவர்கள் இருவரும் கடந்த 1998 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டனர். இது குறித்து அஜித் பழைய பேட்டி ஒன்றில் பேசியபோது, நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம். எனக்கு ஹீராவை மிகவும் பிடிக்கும். ஆனால், எல்லாமே மாறிவிட்டது. நான் முன்பு பார்த்த ஹுரா இப்போது இல்லை. அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார் என்று கூறியிருக்கிறார்.






