அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் ஏகே 62 படத்தின் அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
301
- Advertisement -

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படம் குறித்த அப்டேட் வெளியாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.

ஏகே 62 படம்:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகியத்தை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதற்கு விக்னேஷ் சிவன், நான் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் கதையை மாற்ற சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டேன். அதோடு கதையை மாற்ற சொல்லி அஜித் எதுவும் கூறவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, வருகிற மே 1 அஜித் பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஏகே 62 அப்டேட்:

இதனால் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பின் முதல் பார்வை வெளியாக உள்ளது. இதை அஜித்தே உறுதி செய்து இருந்தார். அதோடு இந்த அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறது. இருந்தாலும், அதற்கான நேரம் நாளை காலை தான் தெரியும் என்று பட குழு தரப்பில் அறிவித்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் ஏகே 62 படத்தின் தலைப்பு குறித்து ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

Advertisement