யப்பா அஜித் ரசிகர்களே இது அஜித்தே இல்லையாம் – இது யார் தெரியுமா ? வெளியான புகைப்படம் இதோ.

0
14706
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து அதிர்ச்சியிடும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல ரசிகர்கள் எல்லாம் மிகுந்த கவலையில் உள்ளார்கள். இறுதியாக அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தின் பணிகள் எப்போதோ துவங்கினாலும் இந்த படத்தின் அப்டேட் நீண்ட மாதங்களாக வரமால் இருந்தது.

இதையும் பாருங்க : கல்யாணத்துல தாலி கட்டிகிட்டேன், ஆனா இதுனால தான் தாலி இப்ப போடுறது இல்ல – கனியின் பேச்சால் ரசிகர்கள் ஷாக்.

- Advertisement -

சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் முழுக்க முழுக்க பைக் தீமை வைத்து தான் போஸ்டர்கள் இருந்தது. இப்படி ஒரு நிலையில் அஜித் படு மாஸாக ஜீப்பில் Drift செய்துள்ளார் என்று வீடியோ ஒன்றை பலர் பகிர்ந்து இருந்தனர். ஆனால், உண்மையில் அது அஜித் இல்லை, அவரை போலவே இருக்கும் நபர். அவர் சைக்கிள் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி அது அஜித் இல்லை என்பது உறுதியாகியள்ளது.

ஏற்கனவே அஜித் இந்த படத்தின் போது பைக் ஓட்டி கீழே விழுந்து விட்டார் என்று ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது அஜித்தும் இல்லை, அது வலிமை படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவும் இல்லை என்பது. தற்போது இந்த வீடியோவையும் அஜித் ரசிகர்கள் பலர் அஜித் என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement