திருச்சி ரைபிள் கிளப் வளாகத்தில் தல ரசிகர்களின் கூட்டம் திரண்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏப்ரலில் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

ஏகே 61 படம்:

இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

அஜித் துப்பாக்கி சுடும் போட்டி:

இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிற தகவல் வெளியாகி உள்ளது. அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான கார் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடுதல் துறையில் பயிற்சிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு இருந்தார்.

Advertisement

துப்பாக்கி சுடும் போட்டி:

இந்த நிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கி இந்த போட்டிகள் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 1,200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், 16 வயது சப்-யூத், 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர், 21ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் , தமிழ்ச்செல்வன், நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்:

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் திருச்சி வந்தார். இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இன்று காலை நடந்த ரைபிள் கிளப்புக்கு வந்த அவர் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார். மேலும், அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அஜித்தை பார்ப்பதற்கு ரசிகர்களின் கூட்டம் வளாகத்தின் முன்பு கூடி இருக்கிறது. அங்கு ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள். அஜித் தன் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement