மேடையில் நடனமாடும் ஜோதிகா – சூர்யாவை கிண்டல் செய்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் அஜித் – காணக்கிடைக்காத வீடீயோ.

0
148661
ajith
- Advertisement -

சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். மேலும், “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற டயலாக் ஏற்ப மாதிரி வாழ்ந்து வருபவர் தான் தல அஜித். எப்பவுமே அஜித் அவர்கள் படம் புரமோஷன், இசை வெளியீட்டு விழா,அவார்ட் நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகர் அஜித் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருப்பவர்.

-விளம்பரம்-

Thala Ajith making fun with actor Surya ( surya joo gossip time)

Ajith Back Bones ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಆಗಸ್ಟ್ 4, 2020

தல அஜித் அவர்கள் கடைசியாக மேடை நிகழ்ச்சி என கலந்து கொண்டது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உடன் தான். அந்த மேடைக்கு பிறகு அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும், பங்ஷன்களிலும் கலந்து கொள்ளவே இல்லை. அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட அஜித் சந்தித்து எந்த ஒரு பேட்டியும் கொடுப்பதில்லை. மேலும், நடிகர் அஜித் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களுள் இதுவும் ஒன்றாக வைத்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அஜித் விழா ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த விழாவில் கேப்டன் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவில் ஜோதிகா காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலை மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

Jyothika reacts if she will pair-up with Suriya for Kaakha Kaakha 2

அதனை கீழே இருந்து அஜித், சூர்யா, சிம்பு போன்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அஜீத், சூர்யாவிடம் ஏதோ கூற, அதற்கு சூர்யாவும் வெட்கத்தில் சிரிக்க, அஜித்தும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். இதை பார்க்கும்போது கண்டிப்பாக அஜித், சூர்யா ஜோதிகாவின் காதல் குறித்து தான் ஏதோ கமெண்ட் அடித்து இருந்திருப்பார் என்பது போலத்தான் தெரிகிறது

-விளம்பரம்-
Advertisement