சிவாஜியுடன் இந்த படத்தில் அஜித் தான் நடிப்பதாக இருந்ததாம். கடைசியில் நடிச்சது இவர் தான்.

0
71738
Ajith-sivaji
- Advertisement -

இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு ஈடு இணை இன்று வரை கூட யாரும் கிடையாது. நடிப்பிற்கான இலக்கணத்தை வழிவகுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வது நடிகர் சிவாஜி கணேசனை தான். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் சாதனை படைத்தவர். இவருடன் இணைந்து நடிக்க கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டு வரை பல நடிகர்கள் காத்து இருந்தார்கள். அந்த வகையில் இவருடன் ரஜினி, கமல், விஜய் போன்ற தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் எல்லாம் நடித்து விட்டார்கள். ஆனால், தல அஜித் மட்டும் இவருடன் நடிக்க முடியாமல் போனது.

-விளம்பரம்-
Image result for Vikram Krishna

- Advertisement -

சிவாஜி கணேசன் அவர்கள் ‘பராசக்தி’ என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கடைசியாக ரஜினியுடன் படையப்பா படத்தில் தான் நடித்திருந்தார். இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பிற்காக வாங்காத விருதுகளே கிடையாது. மேலும், இவருடைய நடிப்பின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை காண்பித்தவர்.

இதையும் பாருங்க : தமிழ் சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் நமீதாவின் கணவர். எந்த சேனல்? என்ன தொடர்? வீடியோவை வெளியிட்ட நமீதா.

இதனாலேயே இவரை “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” எனவும் அழைத்தார்கள். மேலும், நாம் கதைகளில் படித்து வந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூட அழகாக நமக்கு எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன். மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜன் சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற பல தலைவர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியவர். ஏய், பகவதி போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் அவர்கள் சிவாஜி நடிப்பில் “பூவே பூச்சூடவா” என்ற படத்தை இயக்க இருந்தார். மேலும், இந்த படத்தில் விஷாலின் அண்ணன் ஹீரோவாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Related image

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூட கூறி இருந்தார்கள். ஆனால், இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் வேறு ஒரு தயாரிப்பாளர் படத்தை இயக்க வாக்கு கொடுத்து விட்டாராம். அதனால் தான் இந்த படத்தை இயக்க முடியாமல் போனதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதற்கு பிறகு அஜித்தால் நடிகர் சிவாஜி கணேசனுடன்படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போனது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ‘படையப்பா’ படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்து இருந்தார். கமல் அவர்கள் ‘தேவர் மகன்’ படத்தில் நடித்து இருந்தார்.

Image result for sivaji ganesan

அஜித்துக்கு போட்டியாக சினிமா உலகில் வலம் வரும் தளபதி விஜய் கூட ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து இருந்தார். ஆனால், தல அஜித்தால் மட்டும் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொல்லணும். மேலும், 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் அவர்கள் “பூவே பூச்சூடவா” படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தேவர் மகன் 2 படத்திலும் அஜித் தான் நடிப்பதாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement