பிறந்த உடனே என் மகனுக்கு இருதய சிகிச்சை செஞ்சாங்க – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை.

0
2796
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனிகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். தற்போது இவரது மகனுக்கு 9 வயது ஆகிறது.இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே அம்மணி யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். இந்த நிலையில் நடிகை கனிகா, கற்பதிற்கு முன்பம் தற்போதும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது மகனுக்கு பிறந்த சில நாட்களிலேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement